தபால் வாக்குகள் செலுத்துவதில் உள்ள குளறுபடிகள் குறித்து ஜாக்டோ ஜியோ மனு
ஜாக்டோ ஜியோ மனு
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி தபால் வாக்குகள் செலுத்துவதில் உள்ள சுணக்கங்கள் மற்றும் குளறுபடிகள் குறித்து மனு அளித்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன் கு.தியாகராஜன் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாப் சாகுவை நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி தபால் வாக்குகள் செலுத்துவதில் உள்ள சுணக்கங்கள் மற்றும் குளறுபடிகள் குறித்து மனு அளித்தனர். அதில், 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குப் பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகளை வழங்வதில் கடும் சுணக்கமும் குளறுபடிகளும் இருப்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்திய தேர்தல் ஆணையமானது நாடு முழுவதும் 100 சதவிகித ஓட்டுப் பதிவினை உறுதிசெய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate-EDC) அனைத்து நடவடிக்கைகளையும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தேர்தல் பணிக்கு செல்லும் முன்பாக, காவலர்கள் தங்களது வாக்குகளைப் பதிவிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதோ அதன் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து, அவர்களுக்கு வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் விதமாக உரிய அனுமதியினை அளித்து, அனைத்து தேர்தல் அலுவலர்களும் தபால் வாக்குகளை உறுதி செய்திட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story