ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள். தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்-15 அன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம்மற்றும் 26.02.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது.
ஆயத்த மாநாட்டிற்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுருளி நாதன்,கெளரன், ஆகியோர் தலைமைவகித்தனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் வரவேற்று பேசினார். தமிழக ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் இராசா.ஆனந்தன் துவக்கிவைத்து பேசினார்.வட்ட நிர்வாகிகள். ஆர்.முருகன்,எம்.அன்பழகன்,சத்துணவு ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட நிர்வாகி சி.காவேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.