ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு
ஆயத்த மாநாடு
நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அ.தி.அன்பழகன் ( தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), பா. இரவி ( தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்) சி.முத்துசாமி ( தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் பா.ராணி துவக்கவுரையாற்றினார். புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ப.அந்துவன்சேரல் வரவேற்புரையாற்றினார். சு.இரமேஷ், பா.குமார்( தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ), பால.சண்முகம் ( தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), புயல்குமார் ( தமிழக ஆசிரியர் கூட்டணி) எஸ்.சித்திரா ( தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), சு.செங்குட்டுவன் ( முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்), மா.செந்தில்வேலன் ( தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்),முனைவர் சிவகுமார்(தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகம்) ஜோதி லட்சுமி ( சத்துணவு ஊழியர் சங்கம்), உ.சண்முகம் ( அனைத்து மருந்தாளுநர் சங்கம்) சு.வளர்மாலா( ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்), எஸ்.இரமேஷ் ( சாலைப் பணியாளர்கள் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்
. ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளருமான மன்றம் நா.சண்முகநாதன் நிறைவுரையாற்றினார். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்புஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக வரைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், தொடக்கக் கல்வித்துறையில் 90 சதவீத ஆசிரியர்களை பாதிப்பிற்குள்ளாக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15.02.24 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் 26.02.24 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இறுதியாக மாவட்ட நிதிக் காப்பாளர் எம்.காந்தி நன்றியுரையாற்றினார். 250 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.