ஜெகதா பட்டினம் மீன்பிடி இறங்கு தளம் ரூ.10 கோடி மேம்பாடு பணி தீவிரம்!

ஜெகதா பட்டினம் மீன்பிடி இறங்கு தளம் ரூ.10 கோடி மேம்பாடு பணி தீவிரம்!

ஜெகதா பட்டினம் மீன்பிடி இறங்கு தளம் ரூ.10 கோடி செலவில் மேம்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


ஜெகதா பட்டினம் மீன்பிடி இறங்கு தளம் ரூ.10 கோடி செலவில் மேம்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜெகதாபட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடி மேம்பாட்டு பணிகள் ரூ. 10 கோடியில் நடந்து வருவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துகுடா முதல் கட்டுமாவடி வரை 42 கிலோ மீட்டர் தூரம் வரை கடற்கரை பகுதியாகும். இதில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதா பட்டினத்தில் மீன்பிடி துறைமுகங்கள் வழியாக விசைப்படகுகள் மூலம் கட்டுமாவடி, ஆதிபட்டினம், கோட்டைப்பட்டினம், ஏம்பல், அரசங்கரை, முத்துகுடா உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு படகுகள் மூலம் 10 ஆயிரத்துக்கு மேல் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன.

இவர்கள் தவிர அருகில் உள்ள நாகை, ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் குடும்பத்துடன் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர். ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் உரிய வசதிகள் இல்லாததால் விசைப்படகும் மீனவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த துறைமுக பகுதியை விரிவுபடுத்த வேண்டும் என்று பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர் இதை அடுத்து ஜெகதாபட்டினம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளங்களை மேம்படுத்த தலா ரூபாய் பத்து கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முதல் கட்டமாக ஜெகதா பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் மேம்பாடு பணிகள் நடந்து வருகின்றன.

Tags

Next Story