திரவுபதி தர்மராஜா கோவிலில் ஜெகத்ரட்சகன் சாமி தரிசனம்!

திரவுபதி தர்மராஜா கோவிலில் ஜெகத்ரட்சகன் சாமி தரிசனம்!

நெமிலி அருகே உள்ள திரவுபதி தர்மராஜா கோவிலில் ஜெகத்ரட்சகன் சாமி தரிசனம் செய்தார்.


நெமிலி அருகே உள்ள திரவுபதி தர்மராஜா கோவிலில் ஜெகத்ரட்சகன் சாமி தரிசனம் செய்தார்.
ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் உள்ள திரவுபதி தர்மராஜா கோவிலில் கடந்த ஒரு வாரமாக சித்திரை மாத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த கோவிலில் அரக்கோணம் ஜெகத்ரட்சகன் எம்.பி. சாமிதரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. இதில் நெமிலி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ஆர்.பி.ரவீந்திரன், பனப்பாக்கம் பேரூர் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன், கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story