திமிரியில் பிரசாரம் மேற்கொண்ட ஜெகத்ரட்சகன்!

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட திமிரி பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் திமிரி கிழக்கு ஒன்றிய பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் அரக்கோணம் தொகுதி மக்களுக்கு செய்த பல்வேறு திட்டங்களை மேற்கோள் காட்டி வாக்கு சேகரித்த ஜெகத்ரட்சகன் மீண்டும் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரச்சார நிகழ்வில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story