குழந்தை திருமணங்களை ஆதரிப்பவர்களுக்கு சிறை ஆட்சியர் அறிவிப்பு !!

குழந்தை திருமணங்களை ஆதரிப்பவர்களுக்கு சிறை ஆட்சியர் அறிவிப்பு !!

ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ்

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை ஆதரிப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ன் படி பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு கீழும், ஆண்களுக்கு 21 வய துக்கு கீழும் திருமணம் நடத்கப்பட்டால் அது சட்டத்தை குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இதனால் அந்த குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சி குன்றி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குழந்தை திருமணம் செய்த பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனவலிமை இழந்து பாதிக்கப்படுகிறார்கள் குழந்தை திருமண தடை சட்டத்தின்படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள் குற்றம் செய்தவர்களாக கருதப்படுவார்கள்.

இதே போல் குழந்தை திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், குழந்தை திருமணத்திற்கு உதவி செய்த நபர்கள்,அமைப்புகள், திருமண தரகர் ஆகிய அனைவரும் சட்டப்படி குற்றம் செய்தவர்களாக கருதப்ப டுவார்கள். இவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.தர்மபுரி மாவட்டத் தில் குழந்தை திருமணம் குறித்த புகார்களை பொதுமக்கள் 1098, 1077 மற்றும் 181 ஆகிய இலவச தொலைபேசி எண் களில் தொடர்பு கொண்டு உடனடியாக தெரிவிக்கலாம். குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story