கைதியை விரட்டிப் பிடித்த போலீசாரை பாராட்டிய சிறைத்துறை ஏடிஜிபி
காவலர்களுக்கு பாராட்டு
சிறை காவலர்களை பாராட்டிய சிறைத்துறை ஏடிஜிபி மதுரை மத்திய சிறையில் கடந்த 29.11.2023 அன்று தோட்டப்பணிக்காக நியமிக்கப்பட்ட தண்டனை சிறைவாசி ஜெயக்குமார் தப்பிவிட்டார் இவரை பிடிப்பதற்காக மத்திய சிறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது இந்நிலையில் நேற்று நேற்று காலை ஏழு முப்பது மணி அளவில் மத்திய சிறை காவலர்கள் சேதுராமன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிறைவாசி ஜெயக்குமாரை வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்று பிடித்தனர் .
உடன் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் மற்றும் தனிப்படையினர் விரைந்து சென்று சிறைவாசி ஜெயக்குமாரை பிடித்து மீண்டும் மத்திய சிறை மதுரையில் மீண்டும் அடைத்தனர் இது குறித்து தகவல் அறிந்த சிறை துறை ஏடிஜிபி திரு மகேஸ்வர் தயால். IPS . அவர்கள் சிறைவாசியை விரட்டிச் சென்று பிடித்த சிறை காவலர்களிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் இருவருக்கும் பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்குவதற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்று மதுரை மத்திய சிறை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சி நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி திரு. பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் ஆகியோர் விரைந்து சிறப்பாக செயல்பட்ட இரு சிறை காவலர்களுக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பண வெகுமதி ஆகியவற்றை அளித்தனர்.
மேலும் தனிப்படையில் பணிபுரிந்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.