குழந்தைகள் கடத்தல் என வதந்தி பரப்பினால் சிறை
குழந்தைகள் கடத்தல் என வதந்தி பரப்பினால் சிறை என குமரி எஸ்பி பேட்டி.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நிருபர்களிடம் கூறியதாவது:- குமரியில் இரு இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார்கள் வந்தன. போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் மனநலம் பாதித்தவர்கள் என தெரிய வந்தது. அதனுடன் இது தொடர்பாக பரப்பப்படும் காட்சிகள் வெளிமாநிலத்தில் எடுக்கப்பட்ட பழைய காட்சிகளாகும். எனவே குழந்தைகள் கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவிலில் விபத்துகளை தவிர்ப்பதற்கு சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது சென்டர் மீடியன் பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இது நிறைவடைந்த பின், தேவையான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்ப பணிகளில் ஈடுபடுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் சிவால ஓட்டத்தை முன்னிட்டு 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story