கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு சிறை தண்டனை !
திண்டுக்கல், ஆத்தூா் பகுதியில் 10 கிலோ கஞ்சாவை கடத்தியதாக 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டம், நெல்லூா் பிரிவில், கடந்த 20.3.2014 அன்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சோந்த பூமி மகன் மருது (32), கீரிப்பட்டியைச் சோந்த ஜெயராஜ் மகன் ராஜா (45), நெல்லூரைச் சோந்த மாரியப்பன் மகன் கணேசன் (55) ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரக்குமாா், மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் விஜயபாண்டி முன்னிலையாகி வாதிட்டாா்.
Next Story