திருப்பூரில் பெண்ணை தாக்கி துன்புறுத்திய நபருக்கு சிறை தண்டனை
கைது
திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண்ணை தாக்கி துன்புறுத்திய வாலிபருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ. 20000 அபராதம் விதித்தனர்.
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை தாக்கி துன்புறுத்திய நபருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 20,000/-அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 22.07.2021-ம் தேதி சுமார் 10 மணிக்கு திருப்பூர் மாநகரம் தெற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் வசித்து வந்த சிறுமி அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அதே காம்பவுண்டில் வசித்து வந்த ராஜாமுகமது என்பவரின் மகனான அப்பாஸ் அலி(வயது 28) என்பவர் கிண்டல் செய்து கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை தட்டிகேட்க சென்ற அந்த சிறுமியின் உடன்பிறந்த அக்காவையும் அடித்து காயம்படுத்தியதற்காக எதிரி மீது தெற்கு காவல் நிலையத்தில் பெண்ணை துன்புருத்திய வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. அந்த வழக்கு இன்று 18.03.2024-ம் தேதி திருப்பூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு சாட்சிகளை விசாரணை முடித்து பொறுப்பு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி சுகந்தி எதிரியான அப்பாஸ் அலி என்பவருக்கு ஆறு மாதம் சிறைதண்டனை மற்றும் அபராதம் ரூபாய். 20,000/- விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை கையாண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த காவல் ஆய்வாளரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, பாராட்டினார்.
Next Story