வங்கி ஊழியரை தாக்கிய இருவருக்கு சிறை தண்டனை

வங்கி ஊழியரை தாக்கிய இருவருக்கு சிறை தண்டனை

பைல் படம் 

கருங்கல் அருகே வங்கி ஊழியரை தாக்கிய வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கருங்கல் அருகே பாலூர் கண்ணன்விளை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்.கடந்த 2012ல் அரவிந்த் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். அரவிந்த்தை முன்விரோதம் காரணமாக விஜயன் மற்றும் சுனில் சேர்ந்து தாக்கி உள்ளனர். புகாரின் பேரில், கருங்கல் போலீசார் விஜயன், சுனில் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை இரணியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அமீர் தீன் விஜயனுக்கு மூன்று வருட சிறை தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சுனிலுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். சுனிலுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்பதால் அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியதால் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். விஜயன் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story