மதுரை மத்திய சிறைக்கு சிறை கண்காணிப்பாளர் நியமனம்


புதிய கண்காணிப்பாளர்
மதுரை அரசரடி புது ஜெயில் ரோட்டில் உள்ளது மதுரை மத்திய சிறை.இந்த சிறையில் 1500 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளராக இதுவரை யாரும் பதவியில் இல்லாமல் அந்தப் பதவி காலியாக இருந்தது.
இதன் காரணமாக மதுரை மத்திய சிறைக்கு பொறுப்பு சிறை கண்காணிப்பாளராக பரசுராமன் என்பவர் பல மாதங்களாக மதுரை மத்திய சிறையை கூடுதலாக கண்காணித்து வந்தார். இந்த நிலையில் சிறை அதிகாரி பரசுராமன் புழல் இரண்டு மத்திய சிறைக்கு சிறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பணி மாறுதல் செல்கிறார்.
இதனால் மத்திய சிறைக்கு புதிய சிறை கண்காணிப்பாளராக கோயம்புத்தூர் மத்திய சிறை கூடுதல் சிறை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த சதீஷ்குமார் தற்போது சிறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று மதுரை மத்திய சிறையில் புதிய சிறை கண்காணிப்பாளராக இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார்க்கு சிறையில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் சிறை காவலர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


