ஜலகண்டாபுரம் மாரியம்மன் கோவில் தீர்த்த குடம் ஊர்வலம்

ஜலகண்டாபுரம் அருகே ஸ்ரீ வேட்டூர் சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம்.

ஜலகண்டாபுரம் அருகே சின்னாகவுண்டம் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ வேட்டூர் சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சின்னாகவுண்டம் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ வேட்டூர் சின்னமாரியம்மன்,ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து இன்று பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் குடம் எடுத்து வந்து ஜலகண்டபுரம் வன்னியர் கோவிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காங்கேயம் காளைகள், நாட்டிய குதிரை,அணிவகுக்க பம்பை வாத்தியம்,கேரளா சண்டி மேளம் முழங்க ஊர்வலமாக ஜலகண்டாபுரம் கடை வீதி,

காட்டம்பட்டி வழியாக சின்னாகவுண்டம் பட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story