கொளத்தூரில் ஜல்லிக்கட்டு - அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைப்பு

கொளக்காநத்தம் அருகே கொளத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், 200கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பிப்ரவரி 26ம் தேதி துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அரசு விதிமுறைகளின் படி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். முறையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளருக்கும், தங்க காசுகள், சைக்கிள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் 10க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் மூன்று பேர் அரியலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியில் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை திருச்சி மற்றும் ஆத்தூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story