முள்ளிப்பட்டியில் முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.45மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதில் ஜல்லிக்கட்டு காளைகள் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொரோனா பரிசோதனை கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியவர்கள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ணவாடிவாசலிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறி பாய்ந்து சென்று வருகிறது. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு தழுவவும் தழுவ முயன்றும் வருகின்றனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் 250 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.