தென்னங்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி!
புதுக்கோட்டை தென்னங்குடியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர் புதுக்கோட்டை தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக இன்று காலை தொடங்கியது.
போட்டியை வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தொடங்கி வைத்தார் போட்டியில் புதுக்கோட்டை திருச்சி திண்டுக்கல் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடும் காளைகளை காளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வருகின்றனர்
பல காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி அவர்களை திணறடித்துச் சென்றது சில காளைகள் வீரர்களின் சிக்கியது வீரர்களுக்கு போக்கு காட்டி சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாது காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன ஜல்லிக்கட்டு விழாவை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர் முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி வாசிக்க வீரர்கள் எடுத்துக் கொண்டனர்