புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

புதுக்கோட்டை அருகே தைப்பொங்கலை முன்னிட்டு மூன்று ஊர் கிராமத்தார்கள் சார்பில் விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே தைப்பொங்கலை முன்னிட்டு மூன்று ஊர் கிராமத்தார்கள் சார்பில் விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி 800 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.


புதுக்கோட்டை அருகே வடமலாப்பூர், ராஜாபட்டி, குறுக்களாயபட்டி, ஆகிய மூன்று ஊர் கிராமத்து சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு வடமலாபூர் என்ற கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருவது வழக்கம். இதேபோல் இன்று காலை 8 மணிக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இப்போட்டி துவங்கப்பட்டது.

இப்போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதலில் வடமலாபூர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் காளை நார்த்தாமலை கோவில் காளைகள் வடசேரிபட்டி கோவில் காளைகளை அவிழ்த்து விட்ட பிறகு போட்டியில் பங்கு பெறும் காளைகளை அவிழ்த்து விடப்பட்டனர்.

இந்த போட்டியில் திருச்சி தஞ்சாவூர் மதுரை என தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் களத்தில் பங்கு பெற்று போட்டி போட்டு காளைகளை அடக்கி வருகின்றனர்

Tags

Next Story