கொண்டையம்பள்ளியில் ஜல்லிக்கட்டு மைதானம்! அதிகாரிகள் ஆய்வு!!
அதிகாரிகள் ஆய்வு!!
கொண்டையம்பள்ளியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கெங்கவல்லி : சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மற்றும் கொண்டையம்பள்ளியில் ஜல்லிக்கட்டுநடத்த உள்ள இடத்தை, மாவட்ட ஆட்சியர்கார்மேகத்தின் உத்தர வின்பேரில், கெங்கவல்லி வருவாய்த்துறையினர் முதல்கட்ட ஆய்வு நடத்தினர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுக்காவில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கூலமேட்டில் முதலிலும் அதைத்தொடர்ந்து, குடிய ரசு தினத்தையொட்டி தம்மம்பட்டியிலும், தைப்பூ சத்தையொட்டி நாகியம்பட்டியிலும், பாம்பலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உலிபுரத்திலும்தொடர்ந்து கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கூலமேட்டில் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடு க்காத நிலையில், அங்கு முதலில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. தம்மம் பட்டி மற்றும் கொண்டை யம்பள்ளி ஜல்லிக்கட்டுவிழாக்குழுவினர்சார்பில், சேலம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதையடுத்து. ஆட்சியர் கார்மேகம் உத்தரவின் பேரில், தம்மம்பட்டி மற்றும் கொண்டை யம்பள்ளியில் ஜல்லிக்கட்டு நடத்த உள்ள இடத்தை கெங்கவல்லி ஆர்.ஐ., முனிராஜ் நேரில் பார்வையிட்டு முதல் கட்ட ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது தம்மம்பட்டி வி.ஏ.ஓ., பெரியண்ணன், கொண்டையம்பள்ளி வி.ஏ.ஒ., சரிதா மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
Next Story