முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு - 41 பேர் காயம்

முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு - 41 பேர் காயம்

ஜல்லிகட்டு 

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது 41 பேர் காயமடைந்தனர்.

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி தொடங்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப் பட்டது. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து புதுக்கோ ட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை- உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 840 காளை கள் அவிழ்த்து விடப்பட்டன. 249 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர்.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 25 பேர், பார்வையாளர்கள் 4 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 12 பேர் என்று மொத்தம் 41 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.படுகாயமடைந்த 5 பேர் மேல்சிகிச் சைக்காக புதுக்கோட்டை மருத்து வக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தாசில்தார் சாந்தா, துணை தாசில்தார்கள் ராஜ்குமார், ராஜேந்தி ரன், திலகவதி ஆகியோர் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். இலுப்பூர் டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story