ஜல்லிக்கட்டு விவகாரம் : அப்பட்டமாகப் பொய் சொல்லும் மோடி - வைகோ
வைகோ பிரசாரம்
பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ள சொல்லலையில் கூட்டணியின் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிர படுத்தி வருகின்றனர் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து இந்தியா கூட்டணிகளின் தலைவர்களில் ஒருவரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குமாரபாளையம் ஆனங்கூர் தெருவிச்சாலையில் வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார் .
அப்பொழுது அவர் பேசுகையில். நெய்வேலி என்எல்சி பொதுத்துறை நிறுவனம் தனியார் மையம் மாக்கப்பட்ட போது தடுத்து நிறுத்தினேன். பிரதமராக இருப்பவர் யாரையும் மதிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் இந்த சூழலில் தமிழகத்தில் ரத்தமும் கண்ணீரும் சிந்தி காப்பாற்றப்பட்ட திராவிட இயக்ககத்தை பல தலைவர்கள் காப்பாற்றி உள்ளனர் திமுகவில் இருந்து என்னை நீக்கப்பட்ட போதிலும் என்னை வளர்த்த இயக்கம் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி திமுக இயக்கத்தை சாதரணமாக இயக்கமாக நினைக்க கூடாது., தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் போது தமிழ் மொழிக்காக தீக்குளித்து உயிர் நீத்தவர்கள் பற்றியெல்லாம் மோடிக்கு தெரிய நியாயமில்லை.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை துச்சமாக நினைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி திராவிட இயக்கத்தினை அழிக்கும் வழியில் இறங்கினால் நீங்கள் அழிந்து போவீர்கள் 100ஆண்டுகள் பாரம்பரிய கொண்ட கட்சியை அழிப்பது தான் பிரதமர் வேலையா,திட்டம் கொள்கை குறித்து விளக்கி பிரதமர் வாக்கு சேகரிக்க வேண்டும் திமுக ஜல்லிக்கட்டு எதிர்த்தாக பிரதமர் கூறுகிறார் அதற்கு ஒரு ஆதாரம் சொல்ல முடியுமா ஜல்லிக்கட்டு திமுக எதிர்த்ததாக அப்பட்டமாக பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார்.
இந்திய கூட்டணிக்கு நாடு முழுவதும் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.,இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலினை தேடி வந்தனர்., தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டம் குறித்து வரவேற்பு பாராட்டும் தெரிவித்தார்கள் காமராஜர்,தியாகராயர், எம்ஜிஆர் வழியில் முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் கொண்டு வந்து மாணவர்கள் வாட்டத்தை போக்கினார்.,இதனால் வெளிநாடுகளில் உள்ள தலைவர்களை கூட கவரும் வகையில் ஸ்டாலின் செயல்படுகிறார்., கர்நாடக மாநிலத்தில் கெளரி லங்கேஷ் அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ததால் நடு ரோட்டில் இந்துத்துவா சக்திகள் அவரை கொலை செய்யப்பட்டார்.,
இதே போல உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் மாட்டுக்கறி வீட்டில் வைத்திருந்ததாக இஸ்லாமியரை அடித்து கொலை செய்தனர்.மகாத்மா காந்தியை உலகம் போற்றும் நிலையில் நம் நாட்டில் மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே வுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கோவில்களை பற்றி சொன்னால் பாஜக பின்னால் வந்துவிடுவார்கள் என்று இந்துத்துவா சக்தி பரப்புரை செய்து வருகிறார்கள் தமிழகத்தில் கோவிலுக்கு பொதுமக்கள் பக்திக்கு செல்கிறார்கள் தவிர இந்துத்துவா சக்தி சொல்லுவதை கேட்டு கோவிலுக்கு செல்வதில்லை இதனால் பாஜக சொல்லி தான் கோவிலுக்கு செல்வதாக பாஜக மனப்பால் குடிக்கிறது
இந்தியாவில் காஷ்மீர் மூன்று துண்டுகளாக மாற்றியது போல இந்து மதத்தை ஆதரிக்காதவர்களை ஓரம் கட்ட வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது இந்தியா என்ற பெயர் இருக்க கூடாது என்று சொல்லும் பாஜக முஸ்லிம் கிறிஸ்தவ ஆகிய மதத்தினருக்கும் ஓட்டு உரிமை இருக்க கூடாது என்ற வகையில் பாஜக நடவடிக்கை உள்ளது ஆட்சி மொழி இந்தி அல்லது சமஸ்கிருத மொழி இருக்க பாஜக நடவடிக்கை தமிழகத்தில் உள்ள தனித்தன்மை மரபுகளை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்துத்துவா சக்திகள் செயல்பட்டு கொண்டு இருக்கிறது இந்தி என்கிற பேயும், சமஸ்கிருதம் என்ற பிசாசும் தமிழகத்தில் வர விடக்கூடாது இதற்காக இந்த மண்ணில் ரத்தம் சிந்தியவர்கள் குறித்து சிந்திக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் 9.5லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாடு முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பை உருவாக்கி கொண்டு இருக்கிறார்., இதனால் இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பதோடு நம் நாட்டின் பன்னாட்டையும், நாகரீகம்,மரபு மொழி பன்பாட்டை பாதுகாக்க இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். என்றார்