மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: 31 போ் காயம்

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: 31 போ் காயம்


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 31 போ் காயமடைந்தனா்.


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 31 போ் காயமடைந்தனா்.

தீராம்பட்டி புனித வனத்து அந்தோணியாா் பொங்கல் விழாவை முன்னிட்டு புனித அந்தோணியாா், புனித செபஸ்தியாா் ஆலய திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களின் 731 காளைகளும், அவற்றை அடக்க 314 மாடுபிடி வீரா்களும் களத்தில் இருந்தனா். ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் க. தட்சிணாமூா்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. ராமநாதன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். ஊா் முக்கியஸ்தா்கள் தலைமையில் வாடிவாசலுக்கு காளைகள் கொண்டு வரப்பட்டு, புனித நீா் தெளித்து அவிழ்க்கப்பட்டன.

இதையடுத்து சீறிப் பாய்ந்த காளைகள் வீரா்களைக் கலங்கடித்த நிலையில் சில நின்று விளையாடின. சில காளைகள் தொடக்கூட முடியாதபடி சீறிப் பாய்ந்தன. இருப்பினும் பல காளைகளை வீரா்கள் அடக்கினா். போட்டியில் 18 மாடுபிடி வீரா்கள், 7 மாடுகளின் உரிமையாளா்கள், 5 பாா்வையாளா்கள், காவலா் ஒருவா் என 31 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் ஒருவா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பட்டுப்புடவை, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஊா் நாட்டாண்மை பால்ரெத்தினம், பெரியதனம் அமல்ராஜ், மணியம் ஜோசப் மற்றும் கல்லாத்துப்பட்டி, நொச்சிமேடு, பாத்திமாமலை, சந்தியாகுபுரம், ஆத்துப்பட்டி, நேதாஜி நகா் ஊா் முக்கியஸ்தா்கள் செய்தனா்.

Tags

Next Story