நிலவாரப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு

நிலவாரப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு

ஆட்சியர் ஆய்வு 

சேலம் அருகே நிலவாரப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. போட்டி நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டார்.

அதன்படி தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் ஆகியவற்றை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து அலுவர்களிடம் விவரம் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுகாதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களின் உடல் தகுதி பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் டாக்டர்கள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பினர் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடல் தகுதி சான்று மற்றும் பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். காளைகள் காயமுற்றால் அவைகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்கள் மூலம் மருத்துவ முகாம் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி ஜல்லிக்கட்டு நடத்தும் போது வருவாய், காவல்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், தாசில்தார் தாமோதரன் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story