சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
சேலம் மாவட்டம் சங்ககிரி தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி நேற்று தொடங்கியது. சங்ககிரி கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான லோகநாயகி தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை , இலவச வீட்டுமனை பட்டா , பட்டா மாறுதல் உள்ளிட்ட மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, அரசிராமணி, தேவூர், காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட 9 கிராம கணக்குகளை தணிக்கை செய்தார். இந்த ஜமாபந்தியில் சங்ககிரி தாசில்தார் அறிவுடை நம்பி , கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், சமூக நல தனி தாசில்தார் ஜெயக்குமார், மண்டல துணை தாசில்தார் ஜாசிதாபேகம், தலைமயிடத்து துணை தாசில்தார் தமிழ்செல்வி, வட்ட வழங்கல் அலுவலர் அமுதா, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, விஏஓ பிரதீப்குமார் மற்றும் அரசு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.