தர்மபுரி மாவட்டத்தில் இன்று முதல் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று முதல் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டாரங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது .


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டாரங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது .

தர்மபுரி மாவட்டத்தில் ஜமாபந்தி வட்டாரங்கள் வாரியாக நடைபெற உள்ளது இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டாரங்களில் இன்று முதல் ஜமாபந்தி நடைபெறுகிறது இதனை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம்,பாலக்கோடு, தர்மபுரி,அரூர்,நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், ஆகிய ஏழு வட்டாரங்களிலும் இன்று முதல் வருகின்ற 28ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும்.

மேற்படி நாட்களில் முற்பகலில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்கள். பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள்,பட்டாவில் பெயர்திருத்தம்,பட்டாதாரர்பெயர்களில் எழுத்துப்பிழை, பரப்புதிருத்தம், நில உடைமை மேம்பாட்டுத்திட்ட மேல்முறை யீட்டு மனுக்கள், உட்பிரிவு மேல்முறையீடு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்களையும் ஜமாபந்தி அலுவலரிடம் உரிய ஆவண ஆதாரங்களுடன் அளித்து. தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, இந்த ஜமாபந்தி நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Tags

Next Story