பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும் ஜமாபந்தி
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற்றது . குன்னம் வட்டத்திற்கான வருவாயத்தீர்வாயம் நிகழ்வு மாவட்ட ஆட்சியா கற்பகம், தலைமையில் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஓலைப்பாடி பரவாய் புதுவேட்டக்குடி, துங்கபுரம் மற்றும் காடூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாரதிவளவன், வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு தலைமையிலும் ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கோகுல், தலைமையிலும் பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் சங்கரராமன் தலைமையிலும் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடத்தப்பட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றனர். இன்றைய வருவாய்த்தீர்வாயம் நிகழ்ச்சியில் குன்னம் வட்டத்தில் 185 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 107 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் 23 மனுக்களும், பெரம்பலூர் வட்டத்தில் 178 மனுக்களும் என மொத்தம் 493 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் வேப்பந்தட்டை வட்டத்தில் 37 நபர்களுக்கும், ஆலத்தூர் வட்டத்தில் 16 நபர்களுக்கும், பெரம்பலூர் வட்டத்தில் 35 நபர்களுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் வட்டத்தில் 02 நபர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.