நாட்றம்பள்ளி தாலுகாவில் ஜமாபந்தி
மனு அளித்த மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம் பசலி 1433 கான ஜமாபந்தி தொடங்கியது.ஜமாபந்தி நிகழ்வானது 12.06.2024 முதல் 14.06.2024 வரை நடைபெறுகிறது.
இதில் தாலுகாவிற்குட்பட்ட பச்சூர், நாட்றம்பள்ளி ,கொத்தூர் , கே பந்தாரபள்ளி, ஆத்தூர்குப்பம்,திரியாலம்,குடியானகுப்பம்,சின்னமோட்டூர்,நாயனசெருவு,தோப்பலகுண்டா உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் பசலி 1433 கான தீர்வாயம் முகாம் பொதுமக்கள் முன்னிலையில் தொடங்கிறது.
மேலும் இந்நிகழ்விற்கு மாவட்ட வருவாய் அலுவலரும் வருவாய் தீர்வாய அலுவலருமான ஜெ நாராயணன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் சம்பத்,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவனேசன்,வருவாய் ஆய்வாளர்கள் வனிதா,வானதி, கிராம நிர்வாக அலுவலர்கள் விக்னேஷ், நிஸார்,ராஜலட்சுமி, சரவணன்,சந்தீப்,சர்தார்,கெளசல்யா,சிவன்,தீர்த்தகிரி ,
வட்ட வழங்கல் அலுவலர் ராமன்,தலைமை நில அளவை பாபு என பலரும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.