வெம்பக்கோட்டையில் ஜமாபந்தி - ஆட்சியர் பங்கேற்பு

வெம்பக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த வருவாய் தீர்வாயத்திற்கு (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்

. விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 11.06.2024 முதல் 21.06.2024 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.

சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.

வெம்பக்கோட்டை வட்டத்தில், 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் 11.06.2024 முதல் 13.06.2024 வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், இராசபாளையம் வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விருதுநகர் தலைமையிலும், சிவகாசி வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை மாவட்ட வழங்கல் அலுவலர் விருதுநகர் தலைமையிலும், சாத்தூர் வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 வரை தனித் துணை ஆட்சியர் (முத்திரை) விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் 11.06.2024 முதல் 13.06.2024 வரை வருவாய் கோட்டாட்சியர் சிவகாசி தலைமையிலும், விருதுநகர் வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 முதல் 20.06.2024 வரையிலும் வருவாய் கோட்டாட்சியர் சாத்தூர் தலைமையிலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 முதல் 20.06.2024 வரை உதவி ஆணையர், (கலால்) விருதுநகர் தலைமையிலும், காரியாபட்டி வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 மற்றும் 18.06.2024 முதல் 19.06.2024 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர், விருதுநகர் தலைமையிலும், திருச்சுழி வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 வரை மற்றும் 18.06.2024 முதல் 21.06.2024 வரை வருவாய் கோட்டாட்சியர், அருப்புக்கோட்டை தலைமையிலும் நடைபெற்று வருகிறது.

இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story