திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் 20-ந் தேதி ஜமாபந்தி
திருப்பூர் மாவட்டத்தில், 9 தாலுகாக்களில் ஜமாபந்தி நடைபெறும் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் 20-ந் தேதி ஜமாபந்தி! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் வருகிற 20-ந் தேதி முதல் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பங்கள் மற்றும் பல்வேறு துறை சம்பந்தப்பட்ட மனுக்களுக்கு முன்னுரிமை வழங்கி, ஜமாபந்தி தொடங்கும் நாளில் காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி அலுவலரால் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்த பின்னர் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.
இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நடத்திடவும், கிராமக் கணக்குகளை தணிக்கை செய்திடவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். காங்கயத்தில் ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் தலைமையில் 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் நடைபெறும். ஊத்துக்குளியில் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 20-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும். பல்லடத்தில் ஜமாபந்தி சப் கலெக்டர் தலைமையில் 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விடுமுறை மற்றும் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் நடைபெறும்.
திருப்பூர் வடக்கில் ஜமாபந்தி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் 20-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும். திருப்பூர் தெற்கில் ஜமாபந்தி உதவி ஆணையாளர் (கலால்) தலைமையில் 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது...