அணைக்கட்டு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி

அணைக்கட்டு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி

அணைக்கட்டு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி 

அணைக்கட்டு தாலுகாவில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில், விவசாயி ஒருவர் டிஎஸ்பி அலுவலகம் வேண்டி மனு அளித்தார்.

வேலூர் மாவட்டம்,அணைக்கட்டு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று நடந்த ஜமாபந்தியில் ஊசூர் உள்வட்டத்தில் உள்ள பூதூர், சேக்கனூர், தெள்ளூர், புலிமேடு, அத்தியூர், குப்பம், முருக்கேரி செம்பேடு, ஊசூர், உள்ளிட்ட பகுதி பொதுமக்கள், விவசாயிகள் என 87 பேர் பட்டா மாறுதல், பட்டாவில் பெயர் திருத்தம் உள்ளிட்டவை குறித்து மனுக்கள் பெறப்பட்டது. முருக்கேரியை சேர்ந்த முதியவர் கடந்த நான்கு மாதமாக ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கவில்லை, பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தார்.

உடனடியாக வட்ட வழங்கல் அதிகாரி ராமலிங்கத்தை, ஜமாபந்தி அலுவலர் முருகன் அழைத்து உடனடியாக முதியவருக்கு உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிட்டார். விவசாயி ஒருவர் கொடுத்த மனுவில் அணைக்கட்டு தாலுகாவில் சார் பதிவாளர் அலுவலகம், கருவூலம், டி.எஸ்பி அலுவலகம் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

நிகழ்ச்சியில் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, துணை தாசில்தார்கள் பிரியா, இந்துமதி, ஊசூர் வருவாய் ஆய்வாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story