காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 14ல் ஜமாபந்தி துவக்கம்

மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், ஜமாபந்தி என, அழைக்கப்படும் வருவாய் தீர்வாயம் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வாலாஜாபாத் தாலுகாவில், ஜூன்- 14ம் தேதி துவங்கி, ஜூன்- 21ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக கலெக்டர் கலைச்செல்வி நியமிக்கப்பட்டு உள்ளார்.
குன்றத்துார் தாலுகாவில், ஜூன் -14ம் தேதி துவங்கி, ஜூன் -25ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் தாலுகாவில், ஜூன்- 14ம் தேதி துவங்கி, ஜூன் -25ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக,
காஞ்சிபுரம்ஆர்.டி.ஓ., நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், ஜூன்- 14ம் தேதி துவங்கி, ஜூன் -21ம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கு, ஜமாபந்தி அலுவலராக ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., நியமிக்கப்பட்டு உள்ளார்.
