ஜன-25, 26 மதுபான கடைகளுக்கு விடுமுறை

ஜன-25, 26 மதுபான கடைகளுக்கு விடுமுறை

மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற 25,26ம் தேதிகளில் மதுபான கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் ராமலிங்கனார் நினைவு தினமான ஜனவரி 25 ஆம் தேதியன்றும், குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதியன்றும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story