ஜனவரி 10 தர்ணா போராட்டம் - மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

ஜனவரி 10  தர்ணா போராட்டம் - மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

ஜனவரி 10 தர்ணா போராட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23, 24 இரு தினங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பு திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ராகுராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளாக அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் 20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்பட்டது கூட்டுறவு ஊழியர்களுக்கு 10% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள 10% போனஸ் வழங்கப்பட வேண்டும் ஊழியர் கடன்களுக்கு ஏற்கனவே பெற்று வந்த வட்டி விகிதம் உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும் ஏற்கனவே பெற்று வரும் உரிமைகள் சலுகைகள் தொடர்வதாக ஊதிய உயர்வு சுற்றறிக்கையில் இடம்பெற வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பு ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி மாநில அளவில் சென்னையில் ஒரு நாள் தர்ணா போராட்டமும் ஜனவரி 23 24 ஆம் தேதி இரண்டு நாள் வேலை நடத்த போராட்டமும் நடத்துவது என மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story