காஞ்சியில் மல்லிகைப்பூ கிலோ ரூ.200க்கு விற்பனை !

காஞ்சியில் மல்லிகைப்பூ கிலோ ரூ.200க்கு விற்பனை !

மல்லிகைப்பூ

பூக்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் வராததால், மல்லிகைப்பூவின் விலை வீழ்ச்சியடைந்தது.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள வதியூர், கூரம், சிறுவாக்கம், புரிசை, புள்ளலுார், மூலப்பட்டு, மணியாச்சி, சாமந்திபுரம் உள்ளிட்ட வட்டாரங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூ, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. லோக்சபா தேர்தலையொட்டி நேற்று, பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடை சத்திரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மல்லிகைப்பூ சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பூக்களை பறித்துக் கொண்டு காஞ்சிபுரத்திற்கு கொண்டு வந்தனர். பூக்கடை சத்திரம் மூடப்பட்டு இருந்ததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, மல்லிகைப்பூ விவசாயிகளின் நலன் கருதி, பூ வியாபாரிகள் கிழக்கு ராஜ வீதி சாலையாரம் தற்காலிகமாக பூக்கடை அமைத்து, விவசாயிகளிடமிருந்து பூக்களை கொள்முதல் செய்தனர். இருப்பினும், பூக்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் வராததால், மல்லிகைப்பூவின் விலை வீழ்ச்சியடைந்தது.

Tags

Next Story