முகூர்த்த நாளையொட்டி குண்டுமல்லி விலை உயர்வு

முகூர்த்த நாளையொட்டி குண்டுமல்லி விலை உயர்வு

மல்லிகை 

முகூர்த்த நாளையொட்டி சேலத்தில் குண்டுமல்லி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.500-க்கு விற்பனையானது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு ஆத்தூர், வாழப்பாடி, மற்றும் சேலம் பனமரத்துப்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைவாக இருக்கும் பட்சத்தில் பூக்கள் விலை உயர்ந்து விற்கப்படும். அதே போன்று முகூர்த்த நாட்களின் போதும் பூக்கள் விலை உயரும். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் நேற்று மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.360-க்கு விற்ற குண்டு மல்லி நேற்று ஒரே நாளில் ரூ.140 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனை ஆனது. அதே போன்று ரூ.200-க்கு விற்கப்பட்ட சன்னமல்லி, பட்டர் ரோஸ் நேற்று ரூ.400-க்கு விற்கப்பட்டன. பெங்களூரு ரோஸ், கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலையும் உயர்ந்தன.

Tags

Next Story