ரூ.3500க்கு விற்பனையான மல்லிகை

ரூ.3500க்கு விற்பனையான மல்லிகை

பூ மார்க்கெட் 

தை பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.3500க்கு விற்பனையானது. அதேபோல் முல்லை, ஜாதி முல்லை கிலோ ரூ. 1800க்கு விற்பனையானது.
திண்டுக்கல் பூ சந்தைக்கு, திண்டுக்கல், வெள்ளோடு, வக்கம்பட்டி, மைலாப்பூா், சிறுநாயக்கன்பட்டி, மாரம்பாடி, வடமதுரை உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.தற்போது பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மல்லிகை, முல்லை, பிச்சிப் பூக்களின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சந்தையில், மல்லிகை அதிகபட்சமாக கிலோ ரூ.3500-க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1800, காக்கரட்டான் ரூ.1700, அரளி ரூ.200, செவ்வந்தி ரூ.100, ரோஸ் தலா ரூ.250, சம்மங்கி ரூ.150 வீதம் விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் இதை விட கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story