நெல்லைக்கு வருகை தந்த ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா ஆறுதல்
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியின் தந்தை மறைவையொட்டி அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் 50வது வார்டு கவுன்சிலருமான ரசூல் மைதீனின் தந்தை காசியான் நேற்று முன்தினம் வயது மூப்பு காரணமாக உயிரிந்தார். இதனை தொடர்ந்து ரசூல் மைதீனுக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா நேற்று (மே 19) நெல்லை வந்து மேலப்பாளையத்தில் உள்ள ரசூல் மைதீன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
Next Story