ஜெயலலிதாவின் சொத்துக்கள் செயலற்று வீணாகின்றன - நடிகர் கோபி காந்தி பேச்சு
நடிகர் கோபி காந்தி பேச்சு
ஜெயலலிதாவின் சொத்துக்கள் செயலற்று வீணாகின்றன சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி பேச்சு.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் செயலற்று வீணாகின்றன இதை உணர்ந்து இன்றைய அரசியல்வாதிகளும், அரசுத்துறை பொறுப்பில் உள்ளவர்களும் செயல்பட வேண்டும். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி பேச்சு. சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி முன்னதாக தலைமை அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், திரைப்படத் துறையின் சாதனையாளர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் ஜெயலலிதாவின் வாழ்க்கை தொகுப்பு புத்தகத்தையும் நினைவு பரிசாக வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது கோபி காந்தி பேசியதாவது புரட்சித் தலைவி ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காகவே தன் வாழ்வையே அர்ப்பணித்த மாமனிதர். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலே தனது தாய் தந்தையை பிரிந்து குடும்ப சூழல் காரணமாக நாடகக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவர் சிறு வயதிலிருந்தே நாடகத்தில் நடித்து திரைப்படத்துறையில் நுழைந்தவர். தனது கடின உழைப்பால் பல்வேறு கஷ்டங்களையும், அவமானங்களையும் கடந்து திரைப்படத் துறையில் வெற்றி கண்டவர். அவர் கஷ்டங்களையே கடந்து வந்ததால் ஏழை,எளிய மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டார். அவர் பொது வாழ்வில் தம்மை அர்பணிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தார். அரசியல் மூலம் அரசுத் துறைக்குள் நுழைந்தார். அவர் சினிமா, அரசியல், அரசுத்துறை எதுவாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் கொள்கையை பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு திட்டங்களையே தோற்றுவித்து செயல்படுத்தினார். அவர் வாழும் போதும் வாழ்ந்த பின்னரும் இன்றளவும் அவருடைய சொத்துக்கள் செயலற்று வீணாகின்றன. இதை உணர்ந்து இன்றைய அரசியல்வாதிகளும், அரசுத்துறை பொறுப்பில் உள்ளவர்களும் செயல்பட வேண்டும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நேரில் சந்தித்து ஏழை மக்களுக்கான கோரிக்கைகளை வழங்கினேன் உடனடியாக நிறைவேற்றினார் இவ்வாறு விழாவில் பங்கேற்ற சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபிகாந்தி பேசினார். இவ்விழாவில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும், திரளான மாணவ, மாணவியர்களும், இளைஞர்களும் பங்கேற்றனர்.
Next Story