ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் 500 குழந்தைகளுக்கு புத்தாடை கொடுத்து கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர் கழகம் மற்றும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக ராமநாதபுரத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதஅந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நகர் செயளாளர் பால்பாண்டி ஏற்பாட்டில் சுமார்500 பேருக்கு இலவச புத்தாடைகளை அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி வழங்கினார்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுகவை யாரும் புறந்தள்ள முடியாது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரை பற்றி உலகம் அறியும் இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் குறிப்பிட்டுள்ளார் விழாவில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story