ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

 அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் சூரமங்கலத்தில் நடந்தது

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் சூரமங்கலத்தில் நடந்தது

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மேற்கு சட்டமன்ற தொகுதி சூரமங்கலம் தர்மநகரில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.

சூரமங்கலம் பகுதி செயலாளர் பாலு தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் மாரியப்பன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமராஜ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அசோக்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., கலைப்பிரிவு இணை செயலாளர் ஆமூர்.தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை பேச்சாளரும், திரைப்படை இயக்குனருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பொற்காலமாக திகழ்ந்தது. ஆனால் தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளில் வெற்றி பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, பகுதி துணை செயலாளர் பழனியப்பன், விவசாய அணி செயலாளர் சங்கர், மேற்கு ஒன்றிய செயலாளர் மெய்யப்பன், வார்டு துணை செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story