நாட்டேரியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம்
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம்
நாட்டேரியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் தலைமையில் நடைபெற்றது
செய்யாறு அருகே புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது. வெம்பாக்கம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் வயலூர் ராமநாதன் மற்றும் திருமூலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் திரைப்பட நட்சத்திர பேச்சாளர் டி.கே.கலா மற்றும் கழக செய்தி தொடர்பாளர் ஜெமிலா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் தமிழகத்தை ஆளுகின்ற திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டமும் கொண்டு வராமல் மக்களை ஏமாற்றி வருகிறார் எனவும் மேலும் மக்கள் மீது வரியை சுமத்தி விட்டு தற்போது வீட்டு வரி உயர்வு பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு இப்படி மக்கள் தலையில் வரியை சுமத்தி கல்லைத் தூக்கி வைத்துள்ளார். விடியல் தரப் போகிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றி விட்டு 523 வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று பேசினார். இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி காட்டினர் என்றும் மேலும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டது ஆனால் தற்போது திமுக முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார் குறிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று போய் வாக்குறுதிகளை கூறிவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்துவிட்டு மக்கள் மத்தியில் நீட் தேர்வுக்கு கையெழுத்து வாங்கிவிட்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்து போட்ட அனைத்து பேப்பர்களும் காற்றில் பறக்க விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து பேசிய நட்சத்திர பேச்சாளர் டி கே கலா தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு மக்களை ஏமாற்றிவிட்டு சொத்து சேர்ப்பதிலையே குறியாக உள்ளனர் என்றும் மேலும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று பேசினார். இதையடுத்துப் பேசிய கழகச் செய்தி தொடர்பாளர் ஜெமிலா அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தற்போது திமுக ஆட்சியில் கிடைப்பில் போட்டு விட்டனர் எந்த திட்டங்களையும் நிறைவேற்றப்படவில்லை என்று பேசினார். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story