முன்னாள் அமைச்சர் தலைமையில் நல்லம்பள்ளியில் அதிமுக பொதுக்கூட்டம்
நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இன்று மாலை 7 மணி அளவில் அதிமுக கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இன பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் அதிமுக தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கே பி அன்பழகன் அவர்கள் கலந்து கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார் அதிமுக அரசின் நல திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார் நாடாளுமன்ற தேர்தலில் விரும்புவர்கள் அதிமுகவில் இணையலாம் எனவும் யாரை நம்பியும் அதிமுக கட்சி இல்லை எனவும் மக்களை நம்பியே உள்ளது என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சிகள் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மாநில அளவிலான நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தலைமைக் கழக பேச்சாளர்கள் என ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story