துலக்கனூரில் ஜெயலலிதா 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

துலக்கனூரில்  ஜெயலலிதா 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆத்தூர் அருகே துலக்கனூர் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட துலக்கனூர் ஊராட்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி பி சேகர் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு துலக்கனூர் ஊராட்சி பகுதியில் அவரது திருவுருவப்படம் அமைக்கப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் அப்பகுதியில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் அதிமுகவினர் உடன் இருந்தனர்

Tags

Next Story