சிவகாசியில் ஒபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

சிவகாசியில் ஒபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்
பிறந்த நாள் கொண்டாட்டம் 
சிவகாசியில் ஒபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினர். மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம் தலைமையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில்,மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டியன்,மாவட்ட மகளிரணி செயலாளர் நிர்மலாதேவி,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாராம்,நகர செயலாளர் ஆறுமுகச்சாமி உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story