ராசிபுரம் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் - மலர்தூவி மரியாதை

ராசிபுரம் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு புதிய பஸ் நிலையம் அருகே மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



ராசிபுரம் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு புதிய பஸ் நிலையம் அருகே மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, அதிமுக., ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் நகர செயலாளர் எம் .பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வீர முழக்கம் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு பாதுஷா , லட்டு போன்ற இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து பஸ்நிலையம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றி வைத்து பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள எம்ஜிஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் ராசிபுரம் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக நகர கழகத்தின் சார்பில் நடைபெற்றது. மேலும், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட கட்சியினர் ரத்ததானம் செய்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள்,பன், மற்றும் இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் எஸ் பி கந்தசாமி, பொருளாளர் கோபால், வழக்கறிஞர் மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் பி.ராதா சந்திரசேகர், வழக்கறிஞர்கள் பூபதி,பிரபு, முன்னாள் கவுன்சிலர்கள் ஆர்.பி. சீனிவாசன், ஆயில் சீனிவாசன்,ஆர் பி எம் ஜெகன், மகளிர் அணி மகேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஹரி ராகவேந்திரா, விஷ்வா, சர்தார், அதிமுக இந்நாள் கவுன்சிலர்கள் ஆறாயி, மகாலட்சுமி, வார்டு செயலாளர் செல்லமுத்து, சரவணன், மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story




