கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : பொதுமக்கள் அச்சம்

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : பொதுமக்கள் அச்சம்

ஜெல்லி மீன்

தூத்துக்குடி கடற்கரையில் ஜெல்லி வகை மீன்கள் கரை ஒதுங்குவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்னர் கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கின. இந்த ஜெல்லி மீன்களால், கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி கடறட்கரை பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கத் துவங்கியுள்ளன. இதுகுறித்து மீன்வளத் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story