கர்நாடகாவில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை !
பறிமுதல்
கர்நாடகாவில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் போலிசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய 5கோடியே 60 லட்சம் ரூபாய் பணம்: 3 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள், வெள்ளி கட்டிகளை கைப்பற்றி நகைக்கடைக்காரரை கைது செய்து தீவிர விசாரணை.
கர்நாடகாவில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் போலிசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய 5கோடியே 60 லட்சம் ரூபாய் பணம்: 3 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள், வெள்ளி கட்டிகளை கைப்பற்றி நகைக்கடைக்காரரை கைது செய்து தீவிர விசாரணை கர்நாடகா மாநிலம் கனிமவளங்கள் நிறைந்த பல்லாரி மாவட்டம், பல்லாரி புரூஸ் பேட்டை போலிசார் கம்பளி பஜார் பகுதியில் உள்ள ஹேமா ஜிவல்லரி என்னும் நகைக்கடையின் உரிமையாளர் நரேஷ் என்பவரது வீட்டில் நடத்திய சோதனை தான் கர்நாடகா மாநிலத்தின் பேசுபொருளாக மாறி உள்ளது நரேஷ் வீட்டில் 5கோடியே 60 லட்சம் ரூபாய் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும் 3 கிலோ தங்கநகைகள், 103 கிலோ எடையிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 21கிலோ எடையிலான வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 7 கோடியே 60 லட்சம் ரூபாய் எனக்கூறப்படுகிறது. நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம், வெள்ளி, தங்கநகைகள் போலிசார் அடுக்கி வைத்திருப்பது தமிழ் சினிமா அருணாச்சலம் திரைப்படைத்தை நினைவுப்படுத்துகிறது.
Next Story