இருசக்கர வாகனத்தில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை
கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருசக்கர வாகனத்தில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீரனூரில் வசித்து வருபவர் ராமன் விராலிமலை ஒன்றிய அதிமுக அவைத்தலைவரான இவர் நேற்று முன்தினம் 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கில் வைத்து விட்டு திரும்பி வந்து பார்த்தார்.அப்போது வண்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ராமன் அளித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story