வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - பட்டபகலில் துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - பட்டபகலில் துணிகரம்
X

திருட்டு நடந்த வீடு 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாக்கியார் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் 7 பவன் தங்க நகைகள் திருடு போனதை அறிந்த அவர் சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story