தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவிச்சு

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவிச்சு

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவிச்சு

ஆழ்வார்திருநகரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 111 பவுன் பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே கேம்பலாபாத் 2-வது தெருைவச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சபீனா (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சபீனா குழந்தைகளுடன் கேம்பலாபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். உடன்குடியில் வசித்து வந்த சபீனாவின் உறவினர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். எனவே சபீனா தன்னுடைய குழந்தைகளுடன் உறவினரின் துக்க வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று மாலையில் சபீனா குழந்தைகளுடன் கேம்பலாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் உள்ள சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 111 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சபீனா இதுகுறித்து தனது கணவருக்கும், ஆழ்வார்திருநகரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். சபீனாவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடுபுகுந்து துணிகரமாக நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story